கோபம் ஒரு பாவமா??

மனிதர்களின் இந்த பூவுலக வாழ்க்கையில், கோபமும், இச்சையும்தான் பிரதான பாவங்களின் பிறப்பிடமாக நாம் காண்கிறோம். இச்சை என்பது ஒரு உணர்ச்சியாக இருந்தாலும், அந்த உணர்வே ஒரு பாவம் என்று வேதம் பல இடங்களில் தெளிவாக கூறுகிறது. ரோமர் 7:7 ல் "இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே" என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். மத்தேயு 5:28 ல், இயேசு இன்னும் தெளிவாக, ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று நியாயப்பிரமாணத்திற்கு விரிவுரை கூறுகிறார். எனவே இச்சை என்ற உணர்வே பாவம் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் என்று கலாத்தியர் 5:24 சொல்கிறது. 

ஆனால் கோபம் என்பது ஒரு உணர்ச்சி, மாம்சத்தின் வெளிப்பாடு. தேவனும், மற்ற தீர்க்கதரிசிகளும் பல இடங்களில் கோபம் கொண்டார்கள் என்று நாம் வேதத்திலே படிக்கிறோம். சங்கீதம் 4:4 ல் தாவீது ராஜா "நீங்கள் கோபம் கொண்டாலும், பாவம் செய்யாதிருங்கள்" என்று தெளிவாக கூறுகிறார். எபேசியர் 4:26 ல் பவுல் அப்போஸ்தலன் இவ்வாறாக கூறுகிறார், "நீங்கள் கோபம் கொண்டாலும், பாவம் செய்யாதிருங்கள். சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது". 

கிறித்துவின் சாயலாயிருந்து, ஆவியின் கனிகளை தன்னுள் ஏற்றுக்கொண்ட மனிதர்களால் மட்டும் தான், கோபம் பிறப்பிக்கும் பாவத்திலிருந்து நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள முடியும். புதிய ஏற்பாட்டில், கலாத்தியர் 5ம் அதிகாரத்தில் இந்த காரியங்கள் குறித்து மிகத்தெளிவாக கூறியிருந்தாலும், கோபத்திலிருந்து பிறக்கும் பாவங்களை எப்படி தடுப்பது என சங்கீதம் 4 ம் அதிகாரத்தில் தாவீது தனது அனுபவத்தைக் கூறுகிறார்.  

சங்கீதம் 4:4 ல் தாவீது பின்வருமாறு கூறுகிறார்," உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்". தேவனுடைய பிள்ளைகளே, நாம் கோபப்படும் ஒவ்வொரு தருணத்திலும், இந்த வசனத்தை நினைவில் கொண்டு, இந்த காரியத்தை செயல்படுத்துவோமானால், பாவத்துக்கு நம்மை விலக்கிக் காப்போம்.

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றப்படி நடக்கவும் கடவோம் [கலாத்தியர் 5:25]. ஆமென்.


பேதுருவும் சாதிப்பாகுபாடும் ..! [அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்]

  புறஜாதியான (யூதரல்லாத) கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தாருடன் மிகுந்த தேவபக்த...