1. தினமும் ஜெபிக்கிறோமா? எவ்வளவு நேரம், எப்படி ஜெபிக்கிறோம்?
2. உங்கள் ஜெபம் பதிலளிக்கப்படுகிறதா?
3. பதிலளிக்கபட இல்லையென்றால் ஏன்?
சங்கீதம் 65:02 சொல்கிறது "ஜெபத்தை கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்"
மத்தேயு 6:6 சொல்கிறது "நீயோ ஜெபம் பண்ணும்போது ...உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியங்கரமாய் பதிலளிப்பார்".
உங்கள் ஜெபம் மாம்சமான யாவருக்கும் பதிலளிக்கப் படும்; அதில் எந்த சந்தேகமும் இல்லை. பின் ஏன் சில காரியங்களுக்கு நமக்கு பதில் கிடைப்பதில்லை என்பதுதான் நம் மனதில் தோன்றும் கேள்வி.
யோவான் எழுதிய சுவிசேஷம் 11ம் அதிகாரத்தை எடுத்து படித்துவிட்டு மேற்தோடரவும்...
இயேசு பெரிதாய் சிநேகிக்கும் லாசரு வியாதிபட்டிருந்தான். அவனுடைய இரண்டு சகோதரிகளும் ஏசுவுக்கு செய்தி சொல்ல ஆள் அனுப்பினார்கள். அவர் இந்த செய்தியை கேள்விப்பட்டு இரண்டு நாட்களித்து அவனைப் பார்க்கச்சென்றார். அவர் வருகிறாரென்று கேள்விப்பட்டு, மார்த்தாள் அவரை வரவேற்க எதிர்கொண்டு போனாள், ஆனால் மரியாள் வீட்டிலே அமர்ந்திருந்தாள் என்று வேதம் சொல்லுகிறது. [யோவான் 11:20]
இப்பொழுது உலக நாயகர்களான நமக்கு இருவரையும் பற்றி என்ன தோன்றுகிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
இரண்டு சகோதரிகளும் அவரிடத்தில் வேண்டிக்கொண்டார்கள்.
1. முதலில் மார்த்தாள் 21ம் வசனத்தில், "ஆண்டவரே நீர் இங்கிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான், இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வது எதுவோ அதை தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் " என்றாள். அதற்க்கு "அவர் உன் சகோதரன் உரித்தெழுந்திருப்பான்" என்றார். அதற்கு மார்த்தாள், " உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயித்தெழுவான்" என்றாள். அட டே என்ன ஒரு விசுவாசம்.
2. மரியாளும் ஏசுவை சந்தித்தவுடன் "ஆண்டவரே நீர் இங்கிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்" என்றாள். ஆனால் அது வார்த்தைகளால் மாத்திரம் அல்ல, அழுகையும் கதறலுமாய் இருந்தது. அந்த அழுது புலம்பிய வேண்டுதல்தான் மார்த்தாளுக்கும் மரியாளுக்குமான வித்தியாசம். 33ம் வசனத்தில் வேதம் சொல்கிறது, "அவள் அழுகிறதை ...இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கி, துயரமடைந்து, உடனே...அவனை எங்கே வைத்தீர்கள்" என்கிறார். எவ்வளவு துரிதமான பதில் பாருங்கள்....
2 சாமுவேல் 24:16 ல் "தேவதூதன் எருசலேமே அழிக்க தன் கையை அதின் மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு...."
ஓசியா 12:4ல் "அவன் தூதனாரவருடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கி கெஞ்சினான்"
கடைசியாக ஒன்று மட்டும் சொல்லுகிறேன், நீங்கள் ஜெபத்தில் சிந்தும் கண்ணீரில் ஒரு துளிக்கூட நிலத்தில் விழுவதில்லை...சொன்னது நானல்ல...சங்கீதம் 56:8 ல் "என் கண்ணீரை உமது துருத்தியில் (Bottle ) வையும், அவைகள் உம்முடைய கணக்கில் (Book ) அல்லவோ இருக்கிறது.:
மாற்றி ஜெபிப்போம்...அவருடைய கால்களை கட்டிபோடுவோம், பதில் கிடைக்கும்வரை.
