கிறிஸ்தவ வாழ்க்கையில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் பிரசித்தமான வார்த்தை "விசுவாசம்" (Faith). நம்மைப் போன்ற பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு உங்களுக்கு விசுவாசம் இல்லை என்று சொன்னால் கோபம் பீறிக்கொண்டு வரும். ஆம், நாமும் விசுவாசிக்கிறோம் என்பதி ல் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் எந்த அளவு விசுவாசிக்கிறோம் என்பதில்தான் மொத்த கிறிஸ்த்தவமும் அடங்கியிருக்கிறது.
ஆதியாகமம் 22 ம் அதிகாரத்தை வாசித்து பார்த்தோமானால் ஆபிரகாமின் விசுவாசத்தை உணரலாம். அவர் தேவனை கண்டதுமில்லை, வானத்திலிருந்து வரும் ஒரு சத்தத்தை வைத்தே தேவனை விசுவாசித்தார். தனக்கு நூறு வயதில் பிறந்த மகனை, ஈசாக்கை தகன பலியாய் கொடுக்க தேவன் கட்டளையிட்ட போது, ஆபிரகாம் அதிகாலையிலே எழுந்து, தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, அதற்கான கட்டைகளையும் பிளந்துக்கொண்டு, கழுதையில் கூட்டிக்கொண்டு மோரியா தேசத்து மலைகளுக்க்குச் சென்றான் [ஆதியாகமம் 22:2]. எதையும் சாக்கு போக்காய் சொல்வதற்கு ஏதுவாய் மறக்கவில்லை. [முழுமையான கீழ்ப்படிதல் ]
போகும்பொழுது ஈசாக்கு தகப்பனை நோக்கி, இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகன பலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம் "தேவன் தகன பலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்" என்றான். அவர் எந்த மனநிலையில் எவ்வளவு விசுவாசத்தில் இதைச் சொல்லியிருப்பார் என்பதை உங்களின் ஊகத்திற்க்கே விட்டு விடுகிறேன்.
இந்த விசுவாசத்திற்கான பலனைத்தான் நாம் ஆசீர்வாதங்களாக நாம் அடைந்துகொண்டிருக்கிறோம். நமக்கு இப்பொழுது பிதாவை தெரியும், இந்த உலகத்தில் வாழ்ந்து மரித்து இன்று பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கின்ற குமாரனையும் தெரியும், அவர் விட்டுச்சென்ற தேற்றளவாளனையும் தெரியும். அப்படியானால் நமக்குள் இருக்கும் விசுவாசம், ஆபிரகாமைவிட பல மடங்கு இருக்கவேண்டும் ...சிந்திப்பீர்களா?
ஆதியாகமம் 22: 17 & 18 ல் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது
"உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்"
- அடுத்த தலைமுறைக்கான குடும்ப ஊழியம்
23-Oct -2022
