உயிர்த்தெழுதலின் உயிர்

 


அந்த இரவும் எப்பொழுதும் போல இனிதாக விடிந்தது. காலை நேர பரபரப்பில், வளைந்து நெளிந்து தயாராகி, தூசி பறக்கும் சாலையில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருக்கும் வேளையில் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்விதான் இந்த பதிவிற்கு காரணம். தேவ குமாரனின் முதலாம் மற்றும் இரண்டாம் வருகைக் குறித்து, பல தீர்க்கதரிசிகள் முன்குறித்திருக்க, இயேசுவின் உயிர்த்தெழுதல் எங்காவது முன்குறிக்கப்பட்டதா என்பதுதான் கேள்வி. 


இதுபோலவே உயித்தெழுதல் குறித்தான பொதுவான கேள்வி அதை நம்பாத சதுசேயர்களால், இயேசு இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் அவரிடமே எழுப்பப்பட்டது. இயேசு அவர்களிடம் "நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் - மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?" [மத்தேயு 22:29,31] என்று கூறியதினிமித்தம், உயிர்த்தெழுதல் முன்னறிவிக்கப்பட்டது என்று தெளிவாக அறிந்துக்கொள்ளலாம். 

தானியேல் 12: 2 ல் "பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்." என்று இரண்டாம் வருகையின்போது நடக்கபோயாகிற உயிர்த்தெழுதல் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசாயாவிற்கு முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தில், இயேசுவின் பிறப்பு பல இடங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஏசாயா 9:6 ல் "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்." என்றும், ஏசாயா 11:1ல் "ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்." என்றும் தெளிவாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 


அதே ஏசாயாவில், 25ம் அதிகாரம் வசனங்கள் 7 மற்றும் 8 இவ்வாறாக கூறுகிறது. "சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்." மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்பது அவர் மரணிக்கவில்லை அதை வென்றுவிடுவார் என்பதையே உணர்த்துகிறது. 

இயேசு கிறிஸ்த்து தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய சீடர்களுக்கு பல இடங்களின் தன்னுடைய உயிர்த்தெழுதலை அறிவித்தார், அதுமட்டுமல்ல அவர்களின் முன்னாக காட்சிக் கொடுத்தார் என்பதை வேதத்தில் பல இடங்களில் நாம் படிக்கிறோம். தானியேலிடம் தேவன் சொன்னதுபோல, வேதத்தை வாசித்து, ஆராய்ந்து தேவனுக்குள்ளான நமது அறிவை வளர்த்துக்கொள்ளுவோம். ஆமென்.

பேதுருவும் சாதிப்பாகுபாடும் ..! [அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்]

  புறஜாதியான (யூதரல்லாத) கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தாருடன் மிகுந்த தேவபக்த...