உபவாசம்


உபவாசம் என்ற வார்த்தையை  சிறுவயதில் எனக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு என் அம்மாவும் எனது சபையுமே. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவை புறக்கணித்து, அந்த நேரத்தை ஜெபத்தில் செலவிடுவதை பார்த்திருக்கிறேன். அதுபோல மாதத்திற்கு ஒருமுறையாவது என் சபையில் உபவாசக்கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அதைத்தவிர உபவாசம் இருந்து ஜெபித்த பெரிய அனுபவம் எனக்கு இருந்ததில்லை. உபவாசத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறது, தேவனுக்கு உகந்த உபவாசம் என்பது என்ன என்பதைக்குறித்தது வேதம் நமக்கு கற்றுத்தந்தவைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 

பழையஏற்பாட்டின் பெரும்பாலான இடங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி தேவனிடத்தில் வரும்போது, இரட்டுடித்தி உபவாசம் இருந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது [1 சாமுவேல் 7:6, 1 ராஜாக்கள் 21:27]. இதை ஒரு தாழ்மையின் அடையாளமாக நாம் புரிந்துக்கொள்ளலாம். நாங்கள் உபவாசம் பண்ணி, தேவனிடத்தில் தேடினோம். தேவன் எங்கள் விண்ணப்பத்தை கேட்டருளினார் எனறு எஸ்றா தனது 8ம் அதிகாரத்தில் கூறுகிறார். இதிலிருந்து உபவாசம் இருந்து தாழ்மையாய் அவரிடத்தில் வேண்டும்போது, கர்த்தர் நம் விண்ணப்பங்களை தயவாய் கேட்கிறார் என புரிந்துக்கொள்ளலாம். 

எஸ்தர் 4:16ல் , எஸ்தர் ராஜாவின் கண்களில் தயவு கிடைப்பதற்காக, யூதர்களை எல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலும் இருந்து தனக்காக உபவாசமிருங்கள் எனக் கட்டளையிடுகிறாள். மொத்தத்தில், தேவனுக்கு முன்பாக தாழ்மையாயிருந்து தங்களின் விண்ணப்பங்களுக்கு தேவன் பதில் கொடுப்பதற்காக உபவாசமிருந்தார்கள் என்பது நமக்கு தெளிவாக புரிகிறது. 

ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி பின்வரும் மூன்று காரியங்கள் தேவனுக்கு உகந்த உபவாசங்கள் என்று தனது 58ம் அதிகாரம் 7ம் வசனத்தில் குறிப்பிடுகிறார். 

1. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும்

2. துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும்

3. வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும்

4. உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும்

அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? எனக் கேள்வி எழுப்புகிறார். 

இயேசு கிறிஸ்த்துவின் காலங்களில் கூட அவர் மாய்மாலமான, கடமைக்குச் செய்யும் உபவாசங்களையும் ஜெபங்களையும் கடிந்துக்கொள்ளுவதை நாம் இங்கு நினைவுகூறலாம். நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் , ஏசாயா தீர்க்கதரிசி மூலம் நமக்கு உரைக்கப்பட்ட இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு உபவாசித்து ஜெபித்து தேவனின் பதிலை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுவோம். ஆமென்!


பேதுருவும் சாதிப்பாகுபாடும் ..! [அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்]

  புறஜாதியான (யூதரல்லாத) கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தனது குடும்பத்தாருடன் மிகுந்த தேவபக்த...